என் வீடு

"இதையெல்லாம் உன் வீட்டோட வெச்சிக்கோ"-
நித்தமும் நாத்தனாரும்,
சமயத்தில் மாமியாரும் ,
சமயம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணியும் சொல்ல,
இன்று வரை அவளுக்குத் தெரியவில்லை-
"எது என் வீடு?"

Comments