புத்தாடை

அம்மாவின் ரவிக்கைக்கு வடிவமைப்பு,
தம்பிக்கு ஒரு கூடுதல் சட்டை,
அத்தையின் புடவைக்குக் கொஞ்சம்,
தன் ஆடைக்கு வைத்த காசை
பிற செலவுகளில் இட்டு நிரப்பிய பின்,
தீபாவளிக்கு அப்பா உடுத்தியது என்னவோ-
பொங்கலுக்கு அரசு தந்த இலவச வேட்டி !

Comments