"தாகமா இருக்கு.. தண்ணி கிடைக்குமா"-
இரவு ஒன்பது மணிக்கு யார் வீட்டிலோ தயக்கத்துடன் கதவை தட்டினார்,
சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்த கட்சித் தொண்டர்-
"நாளை தலைவர் போராட்டம்..
காலை 6 மணி முதல் சுவரொட்டி ஒட்டுகிறோம்..
இன்னும் முடிந்த பாடில்லை..."
ஒட்டிய சுவரொட்டியில் தலைவர் சிரித்தார் -
"8 மணி நேர வேலையைக் கட்டாயமாக்குவோம்..
உரிமை காப்பு உண்ணாவிரதப் போராட்டம்"
Comments
Post a Comment