பெரும் மலை ஒன்றின் மேல்
தனித்து நின்றது அந்த பெரிய மரம் !!
"என்னைப் போல் நீயும் அநாதையா?"-
நான் கேட்டேன்.
கிளை அசைய சிரித்தது -
"கூட்டில் இரு குருவிகள்,
பொந்தில் ஒரு முயல்,
வேரடியில் இரு எலிகள்,
அங்கங்கே எறும்புகள்,
மேல் ஆபரணம் போல் பூங்கொடி -
இத்தனை பேர் உடனிருக்க
நான் எப்படித் தனிமரம்?"
"இயலாதவருக்கு இடமளிக்கும் யாரும்
தனிமரம் ஆவதில்லையப்பா..."
உரைத்தது மரம் -
உறைத்தது என்
மரமண்டைக்கு!!
That's wonderful one Sreenath
ReplyDeleteWow.. Nice
ReplyDeleteVery Nice..
ReplyDelete