மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி. யஷி தன் நான்கு வயது மகனுடன் கடைத்தெருவில் தேவையான காய்கறி, பழம், வெண்ணெய் உள்ளிட்டவைகளை வாங்கிக் கொண்டிருந்தாள். அவளது மகனும் ஆர்வத்துடன் சுற்றி வேடிக்கை பார்த்தபடி அவள் கையைப் பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.
தேவையான பொருட்களை வாங்கி விட்டு அவள் ஒரு கடையை விட்டு வெளியே வந்த போது அவள் மகன் கண்ணன் அவளை நோக்கி பாவமான முகத்துடன் "அம்மா சாக்லேட் .." என்றான். அவளும், "சரி . ஆனா ஒண்ணு தான்", என்றபடி அவனுக்கு ஒரு மிட்டாயை(சாக்லெட்) வாங்கித் தந்தாள். அவன் அதைப் பிரித்து வாயில் போட்டு விட்டு மூடுதாளைத் (கவரை) தன் சட்டைப் பையில் போட்டான். பட்டென்று அவன் கையில் ஒரு அடி வைத்து, "குப்பை எல்லாம் பாக்கெட்ல போடக் கூடாது. கீழே போடு" என்று அடிக்க, அவன் அதை எடுத்து வெளியே போட்டபடி, "குப்பையைத் தொட்டியில தான் போடணும். வெளிய போடக் கூடாது-னு டீச்சர் சொல்லிருக்காங்க. இங்க குப்பைத்தொட்டி இல்ல. குப்பையை இப்புடியே வெளிய கொட்டுனா உலகம் பூரா குப்பை ஆயிடும். " என்று அழுதபடியே சொன்னான். அவனது உபதேசம் அவளது தலைக்கனத்தைத் தட்டி எழுப்ப,"எதிர்த்து பேசாதே", என மேலும் ஒரு அடி அடித்து அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று, உணவளித்துத் தூங்க வைத்தாள்.
கணவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தபடியால், மகனைத் தூங்க வைத்து விட்டு, அவளும் அருகே படுத்தாள். தன் மகனைத் தேவையின்றி அடித்து விட்டோமோ என்ற எண்ணம் அவளை உறுத்திக் கொண்டிருந்தது. தூக்கத்தில் அவள் எண்ணங்கள் கனவாக விரிந்தன.
* * * * *
விடிந்து எழுந்து தன் கைபேசியைக் கண்டாள். நாள் 22-08-2047. காலை 8 மணி. மகன் ஏற்கனவே அலுவலகம் சென்றிருப்பான்.
அவள் கலைந்திருந்த தன் நரைத்த கேசத்தைக் கண்ணாடியில் பார்த்தபடி போய் காலைக் கடன்களை முடித்துவிட்டு தன் மருமகள் தந்த அமில நீர் காபியைக் குடித்து விட்டு, இரண்டு நீர் மாத்திரைகளை விழுங்கிவிட்டு, செய்திகள் காண்பிக்குமாறு கட்டளையிட, அவள் எதிரே முப்பரிமாணத்தில் செய்திகளை ஒரு பெண் சொல்லத் துவங்கினாள். மருமகள் அவளது காபி டம்ளரை ஒரு நெகிழி(பிளாஸ்டிக்) துணியால் துடைத்து வைத்தாள்.
"மூச்சு முட்டுது. இன்னும் கொஞ்சம் உயிர்-வளி (ஆக்ஸிஜன்) அளவை அதிகமாக்குகிறேன்" சொல்லி அவள் மருமகள் உயிர்-வளி இயந்திரத்தை வேகமாக்கினாள்.
* * * * *
உலகம் முழுக்கக் காற்று மாசடைந்ததால் அனைவர் வீட்டிலும் சுத்தமான காற்றை அளிக்க இயந்திரங்கள் தேவையாக இருந்தது.நீர் மாத்திரை மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் குடும்பத்துக்கு 100 மாத்திரைகள் அரசு இலவசமாக அளித்து வந்தது. அதை விட்டால் சில திரவங்களைத் தான் உண்ண வேண்டும். ஆனால் அவை தண்ணீர் போல் சிறப்பாக இல்லை. ஒரு நாளுக்கு ஒரு 3 அல்லது 4 மாத்திரைகளாவது நீர் மாத்திரை தேவைப்பட்டது. ஒரு காலத்தில் தண்ணீர் ஆறாக ஓடியது என்பதை பாடப் புத்தகத்தில் மட்டுமே மாணவர்கள் படித்தார்கள். "அவை அனைத்துமே போலி, அப்படி என்றும் தண்ணீர் ஓடியதே இல்லை. அப்படி எல்லாம் ஓடியதாக நம்ப வைப்பது இலுமினாட்டி சதி" என்றும் ஒரு கூட்டம் அந்த நாட்டில் சொல்லி வந்தது.
ஒரு குடிநீர் மாத்திரையே ஆயிரக்கணக்கில் விற்கும் போது அது தரையில் ஓடியது என்பதெல்லாம் இவை எதையும் பார்த்திராத சிறுவர்களுக்கு நம்பக் கூடியதாக இல்லை. அவர்களில் சிலர் நதி, ஆறு, ஏரி & என்பதெல்லாம் இலுமினாட்டி சதியே என்றும், இவைகளைப் பரப்பி மூடநம்பிக்கையை வளர்க்கவே காணொளி(வீடியோ), புகைப்படம் உள்ளிட்டவை பரப்பப்படுவதாகவும் நம்பினார்கள். தங்கள் பெற்றோர் அறியாமையால் இவற்றை நம்புகிறார்கள் என்றும், தாம் பகுத்தறிவோடு வரும் தலைமுறைகளை இத்தகைய மூடநம்பிக்கைகள் இல்லாமல் வளர்க்க வேண்டும் என்றும் உறுதி கொண்டார்கள்.
* * * * *
போரடித்ததால் வெளியில் செல்லலாம் என நினைத்து, "சரிம்மா. நான் வெளியே போயிட்டு வர்றேன்" என்றபடி அவள் உயிர்-வளி தலைக்கவசத்தை(Oxygen Helmet) மாட்டியபடி வெளியே கிளம்பினாள். அது அரசாங்க சட்டம். வளி மாசால் பலர் உயிரிழந்ததால் அரசு அதைக் கட்டாயம் ஆக்கி இருந்தது. தன் குடியிருப்பின் ட்ராவல்லேட்டரில் ஏறி, வாசலுக்குப் போ என்று கட்டளையிட, அது "காலை வணக்கம்" சொல்லியபடி விரைந்து கீழே இறங்கித் தரைக்கு வந்தது. பின் அவ்வாறே தரையில் சிறிது தூரம் நகர்ந்து அவளைக் கதவுக்கு அருகே விட்டது.
கதவைத் தாண்டி அவள் தெருவோர வாக்கலேட்டரில் ஏறினாள். இரண்டு புறங்களிலும் செல்ல ஒவ்வொரு தெருவிலும் வாக்கலேட்டர்கள் இருந்தன. தேவையான இடத்தில் இறங்கி ஏறினால் போதுமாக இருந்தது.
காற்று மிகவும் மாசடைந்திருந்ததால் புகையை மீறித் தெரியக் கூடிய விளக்குகளைச் சாலைகளில் பயன்படுத்தினர்.
அவள் தெருக்கோடியில் இறங்கி, அடுத்த தெரு வாக்கலேட்டர்களைக் கடந்து தான் செல்ல விரும்பிய பேரங்காடியை (மால்) அடைந்தாள். வழியில் பலர் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நிலை வெகு பரிதாபம். சுற்றுச்சூழல் மாசால் உணவு மட்டுமின்றி சுவாசம் முதற்கொண்டு அனைத்தும் கடினம்.
பேரங்காடிக்குள் சென்று தன் உயிர்-வளி தலைக்கவசத்தைக் கழற்றி எடுத்தாள். அங்கிருந்த இயந்திரப் பெண்களில் ஒருத்தி அவளுக்கு வணக்கம் சொல்லி, வேண்டியது என்னவெனக் கேட்டது. அவள் கேட்ட பொருட்களை முப்பரிமாணத்தில் (3D) அவளுக்குக் காட்டியது. துணிகள் சிலவற்றை மட்டும் அவள் தொட்டுப் பார்க்க வேண்டுமெனக் கேட்க அவளுக்கு மாதிரி துண்டுகளை வரவழைத்துக் காட்டியது. தேவையானவற்றை வாங்கிய பின், அந்தப் பெண் விலை சொல்ல, இவள் ஒப்புதலாகக் கண் சிமிட்டினாள். அவளது வங்கிக்கணக்கில் இருந்து அந்த தொகை வசூலிக்கப்பட்டது. அவள் வாங்கிய பொருட்களை மற்றொரு இயந்திரப் பெண் கொண்டு வந்து தர, அவள் பெற்றுக் கொண்டாள்.
* * * * *
வெளியேற எத்தனிக்கையில் அந்த மாலின் நடுவிலிருந்த ஒரு அழகான சுற்றுச்சூழல் மாதிரி அவள் கண்ணைக் கவர்ந்தது. அதைச் சுற்றிக் குழந்தைகள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
"இதோ பாரு . இப்படி தான் அம்மா சின்ன பொண்ணா இருக்கும் போது தண்ணீர் ஓடும்" - ஒரு தாய் தன் குழந்தைக்கு காட்டிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை கண்களை விரித்து ஆச்சர்யத்துடன் பார்த்தது. பச்சை மரங்கள், தலைக்கவசம் இன்றி சுவாசிக்கும் மனிதர்கள்-எல்லாமே அவர்களுக்கு வியப்பளித்தது. அவள் மனதில் கனவு போல அவளது இளமைக்காலம் நினைவுக்கு வந்து போனது.

இயற்கையின் அழிவை உணர்ந்து மெல்லிய சோகத்துடன் அவள் மாலை விட்டு வெளியில் வந்து வாக்கலேட்டரில் ஏறத் துவங்கிய நொடி, அருகில் தெருவின் ஓரத்தில் ஒரு குழந்தை மூச்சு திணறிக் கொண்டிருந்ததைக் கண்டாள். அவன் ஒரு ஏழைக் குழந்தை போலும். வீடே இல்லாத அவனுக்கு ஆக்ஸிஜன் ஹெல்மெட் ஏது. அவள் அவனைத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குச் சென்றாள். அரசு இலவச ஊர்தி வருவதற்குள் எமனின் எருமை மாடே வந்து விடும் என்னும் நிலை மட்டும் தன் இளமைக் காலத்தில் இருந்து மாறவில்லை என்று நினைத்த போது அவளுக்குச் சிரிப்பு வந்தது.
மருத்துவமனையில் ஒரு பெரிய கூட்டம் காத்திருந்தது. அவள் அவனோடு அங்கிருந்த வரவேற்பு இயந்திரத்திடம் சென்றாள். "தமில் நாடு சர்க்காரிய முப்த்து ஆஸ்பதல் மேம் ஆப்கா ஸ்வாகத் ஹை" - அது இந்தியில் வரவேற்றது. "ஹிந்தி நஹி. ஆங்கிரேஜி போலோ" (ஹிந்தி தெரியாது. தமிழ் பேசு) என்று அவள் கத்த, அது "ஓக்கே" என்றது. இந்தி மொழி தான் அரசு சேவைகளில் என்ற நிலை ஏறத்தாழ 15 ஆண்டுகளாக உருவாகி இருந்தது. அவளுக்கு என்னவோ அந்த மொழி பிடிபடவில்லை. "ஹிந்தி நஹி. ஆங்கிரேஜி போலோ" என்ற வாக்கியத்தை மனப்பாடம் செய்து அதை எல்லா இயந்திரங்களிடமும் பேசி வந்தாள்.
பதிவு செய்தவர் என்று அவளது உரிமை எண்ணைக் குறித்துக் கொண்டு, நோயாளியின் உரிமை எண்ணைக் கேட்க, அவள் "எமெர்ஜன்சி" என்று தெரிவித்து, "நோயாளி விவரம், உரிமை எண் தெரியாது " எனப் பதிவு செய்து அந்தப் பையனை இயந்திரத்தின் முன் இருந்த படுக்கையில் படுக்கச் செய்தாள். அந்தப் பையனின் கையில் தன் இயந்திரக் கையை வைத்து அவனைச் சோதனை செய்தது. அவனது மூச்சு வேகம், குருதிக் கொதிப்பு எல்லாவற்றையும் சோதித்து ஒரு சீட்டைப் அச்சடித்துத் தந்தது. அதில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அந்தப் பையனின் விவரங்கள் இருந்தன. அவனது கை, கண் ரேகைகள் கொண்டு அவன் உரிமை எண் விவரங்களையும் அது குறித்திருந்தது.
அவசர நிலை என்பதைக் குறிக்கும் சிவப்பு குறியீடு இருந்ததால், தடையின்றி அவளால் மனித மருத்துவரைக் காண முடிந்தது.

அந்த மருத்துவர் சிறுவனைப் பரிசோதித்தார். அவனுக்கு உடனே சில உயிர்-வளி ஊசிகளைக் குத்தினார். அவன் மூச்சிரைத்தல் குறையவில்லை. பழைய வழக்கப்படி முயற்சிக்கலாம் என்றெண்ணி அவன் மூக்கில் உயிர்-வளிக் குழாயைப் பொருத்தினார். "சிறிது நேரம் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு அவர் விவர ஏட்டை பொறுமையாகப் படித்தார். "பேரு என்ன. யசோதா-வா?? தெருவுல இருந்த பையனைத் தூக்கிட்டு வந்துருக்கீங்களா. நல்லவங்களா இருப்பீங்க போலருக்கே. " , அவர் ஆங்கிலத்தில் பேசினார். அவர்கள் பேச்சு பதிவு செய்யப்படும். இந்தி, ஆங்கிலம் தவிர அவர்களாக மற்ற மொழிகளில் பேசக் கூடாது என்று கட்டளை.
"தமிழ் பேசலாமா?" அவள் கேட்க "பேசலாமே. இந்த மருத்துவமனையில் இருக்குறதுல எனக்கும் இன்னும் ஒருத்தருக்கும் தான் தமிழ் தெரியும். மற்ற எல்லாரும் ஹிந்தியும் ஆங்கிலமும் தான் " அவர் தொடர்ந்தார், "மற்றபடி இயந்திரங்கள். அவை எல்லா மொழியும் பேசும்", சிரித்தார். அவள் அவனைப் பார்த்ததையும் அவனைத் தூக்கி வந்த விவரத்தையும் தெரிவித்தாள்.

சிறிது நேரம் கழித்தும் அவன் மூச்சிரைத்தல் நிற்காததால் அவர் அவனுக்கு காண் சோதனை(ஸ்கேன்) எடுக்க முடிவு செய்தார்.
"நீங்க கெளம்புறதுன்னா கிளம்புங்க. தேவைப்பட்டா உரிமை எண்ணை வைத்து தொடர்பு கொள்வோம்" என்று அவர் சொல்ல, "வேணாம் இருக்கேன்", எனச் சொல்லிவிட்டு, அவள் தன் மருமகளுக்கு "சற்று தாமதம் ஆகும். வந்து விடுகிறேன்" என்று முப்பரிமாணக் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
அவர் சிறுவனுக்கு நுரையீரல் காண் சோதனை எடுத்தார். அவளிடம் சொன்னார், "அந்தப் பையன் நுரையீரல் முழுக்க நெறைய துகள் குப்பை மேடம். அதுனால தான் அவனுக்கு மூச்சிரைச்சல். போன தலைமுறைல வகை தொகை இல்லாம குப்பையைக் கண்ட எடத்துல கொட்டுனதுல சுற்றுச் சூழல் முழுக்க பாதிச்சுப் போச்சு. "
அவள் அருகே செல்ல, அந்தச் சிறுவன் முகம் அவள் மகன் முகத்தைப் போலத் தெரிந்தது. மூச்சிரைக்க அந்த சிறுவன் வாயைத் திறந்து மூட, அவளுக்கு அந்த வாய்க்குள் உலகமே குப்பையுடன் தெரிந்தது. மூச்சிரைத்தபடி அவள் காதருகில் வந்து "நாம குப்பையை ஒழுங்கா தொட்டில கொட்டி இருக்கலாம்மா. ஏம்மா அப்போ ஒழுங்கா கொட்டல. சொல்லுங்கம்மா... அம்மா அம்மா... " என்று அவளை வேகமாக உலுக்க அவள் திடுக்கிட்டு விழித்தாள்.
* * * * *
அவள் அருகே அவள் மகன் கண்ணன் அவளை பிடித்து உலுக்கிக் கொண்டு இருந்தான். "அம்மா...அம்மா... எழுந்திருமா.. இன்னிக்கு கிச்சா பாப்பா பர்த்டே. சீடை, முறுக்கு எல்லாம் செய்யணுமே. சீக்கிரம் எழுந்துரும்மா" அவன் அவளைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்க, கனவின் பாதிப்பு நீங்காது அவள் அவனை வெறித்து நோக்கினாள். அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
"இனி நான் குப்பையைத் தெருவுல போட மாட்டேன் கண்ணா. நீயும் போட வேணாம். சரியா? " அவள் சொல்ல அவன் முகம் மலர்ந்து புன்னகை செய்தான். "சரிம்மா" அவன் சந்தோஷமாக சொல்ல அவள் அவனைக் கட்டி அணைத்தாள். அவன் ஒரு நிமிடம் அழுகையுடன் சொன்ன வரியின் தாக்கம் தனக்கு உலகின் தன்மையையே கனவாக உணர்த்தி விட்டதாக அவள் உணர்ந்தாள். அவன் வார்த்தைகள் அவளுக்கு அளிக்கப்பட கீதோபதேசமாகவே அவளுக்குப் பட்டது.

"ஹேய்ய்ய்ய்.... கிச்சாக்கு இன்னிக்கு பர்த்டே " அவன் கத்தியபடி விளையாட ஓடினான். பூஜை அறையில் கண்ணன் விக்கிரகம் புன்னகைத்தது.
* * * * *
உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன் என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்
உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன் என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்
really nice bro.... do more
ReplyDelete