என்றோ ஒரு நாள்

லலிதாமிக உற்சாகமாக இருந்தாள். அமெரிக்கா சென்ற மகன் மருமகள், பேரனோடுகாஞ்சிபுரத்திற்கு வருகிறான். ஏறத்தாழ பத்து வருடங்கள் ஆகி விட்டன அவன்இந்தியா கடைசியாக வந்துவேலைக்காகபோனவன் திருமணத்திற்காக ஒரு முறை வந்ததுதான் கடைசி. அதற்கு பின் மருமகள் பிள்ளையாண்டிருந்தபோது கூட இவளும் சம்மந்திஅம்மாளும் தான் முறை வைத்துபோய் பார்த்து கொண்டார்கள். இதோ ஆகி விட்டதுபத்து வருடங்கள். இந்த நாட்களில் இவர்கள்தொடர்பு கொண்டதற்கு மொபைல் போன் தான் புண்ணியம்கட்டிக் கொண்டது. ஸ்கைப் மூலம் பேரனோடு பேசிய அளவில் திருப்தி பட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென அவன் குடும்பத்தோடு வருவதாகசொன்னது மிகுந்த மகிழ்ச்சியில் அவளை தள்ளியது ஆச்சர்யம்இல்லையே.

முதலில்தினம் பேசி வந்து பின்வாரம் இருமுறை ஆகிப் போன ஸ்கைப் உரையாடலில்ஒரு நாள் திடீரென அவன்வரும் விஷயத்தைத் தெரிவித்தான்.
"அம்மா.. இந்த வருஷம் அத்தி வரதர் வெளிய வருகிறார் இல்ல.. தரிசனம் பண்ண நாங்க மூணுபேரும் மூன்று வாரம் விடுமுறையில்  வர்றோம். "



மிகுந்தமகிழ்ச்சி கொண்டனர் பெற்றோர். லலிதா அன்று முதலே மகனுக்கு பிடித்த ஆவக்காயையும் வடு மாங்காயையும் வாங்கிஎண்ணெய்யில் ஊற வைத்தாள். பேரனுக்குஎன்று தனியாக முறுக்கும் தட்டையும் செய்தாள். மருமகளுக்கு சுடிதார்கள் வாங்கி வைத்தாள். ஊரெங்கும் மகன் வரும் செய்தியை பகிர்ந்து மகிழ்ந்தாள்.

மகன்வருவது ஒரு பக்கம் என்றால்அவளை  'அம்மா' , 'அம்மா' என்று வாய் நிறைய அழைக்கும் மருமகள் வருகிறாள்என்பது இரட்டை மகிழ்ச்சி . திருமணம் முடிந்த ஒரு வாரம் அவள்வீட்டில் மாமியாரையும் மாமனாரையும் கவனித்து கொண்ட சீர் பார்த்து ஊரேகண் வைத்தது. அமெரிக்கா திரும்ப வேண்டிய நிலை- அவர்கள் கிளம்பிய பின், அவர்களோடு  ஒரேவீட்டில் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவளைவிட்டு இன்றளவும் போகவில்லை. மருமகளோடு தான் மீண்டும் சிலநாட்கள் இருக்க போகிறோம் என்று மகிழ்ந்தாள். நாற்பது வருடம் ஒரு முறை மட்டும்தரிசனம் தரும் அத்திவரதரை மனமார துதித்தாள்

இத்தனைஆண்டுகள் கழித்து அவன் வர எண்ணியதேஅவரை உத்தேசித்து தானே. சிறு வயது முதலேஅவர் பற்றிய கதைகளைக் கேட்டிருந்த காஞ்சிபுரத்து சிறுவர்கள் எல்லோருக்கும் அவர் ஆதர்ச நாயகர். அவரை பார்க்க வேண்டும் என்பது சிறு வயது முதல்கனவு. அதனால் தான் அவன் அமெரிக்காவில்இருந்து இப்போது குடும்பத்தோடு வருகிறான்.
எதுஎப்படியோ அத்தி பூத்தாற் போல அத்தியூர் அழகனானஅத்தி வரதன் வரும் நேரம் அவள் வீட்டு அழகனானஅவள் மகனும் வருகிறான்.

அத்தி வரதர் அல்லது அத்தியூர் வரதர்- காஞ்சி நகரின் புகழ் பெற்ற வரதராஜ ஸ்வாமி கோவில் குளத்தின் அடியில் வசிக்கும் அத்தி மரத்தாலான திருமாலின் திருமேனி. 40வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் வெளியில் எடுத்து 48 நாட்கள் வழிபட்ட பின் மீண்டும் குளத்தின் அடியில் அவரை எழுந்தருள செய்வது கோவில் வழக்கம். அவரை அவ்வாறு குளத்தடியில் எழுந்தருள செய்து விட்டால் மீண்டும் அவரைக் காண 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனவே அவர் வெளிவரும் சில நாட்களில் அனைவரும் தரிசிக்க விரைவதில் ஆச்சர்யம் என்ன.


லலிதாவின் மகனும்மருமகளும் விமான நிலையத்தில் இருந்து  நேரேஇவர்கள் வீட்டுக்கு வந்த நேரம் காஞ்சிபுரம்அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. சாரை சாரையாக மக்கள்கூட்டம் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து குவிந்தது அத்தியூரானைக் காண.
லலிதாவும் அதேஊர் தான். அவளுக்கும் சிறு வயது முதல்அத்தி வரதர் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு உண்டு. முதல் முறை அவரைப் பார்த்த போதுவந்த சந்தேகம் அவளுக்கு இன்று வரை தொடர்கிறது "இத்தனைஅருமையான வரதர் ஏன் 40 வருடங்களுக்கு ஒருமுறை தான் தரிசனம் தருகிறார்? அவரை எப்போதும் காண முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் "

குடும்பத்தோடு 500 ருபாய் தரிசனத்தில் வரதனை தரிசித்து வந்து பின் சம்மந்தி வீட்டிற்குச்சென்று தங்கி ஒரு வாரம் கழித்துமீண்டும் வந்தனர் மகனும் மருமகளும். வீட்டில் மருமகள் இருந்த நேரம் முழுதும் குடும்பமே குதூகலமாய் இருந்தது. பல நாட்கள் கழித்துஅமைதியான அவர்கள் வீட்டில் ஆரவாரம் கேட்டது.

நள்ளிரவுவரை பேசி சிரித்து விட்டுஅவர்கள் போய் தூங்கினார்கள். காலையில்திடீர் தொலைபேசி மகன் நிறுவனத்தில் இருந்து. அவன் விசா தொடர்பாகஎதோ பிரச்சனை இருந்ததால் மேலும் மூன்று மாதம் அவன் அமெரிக்கா திரும்பமுடியாது. எனவே அது வரைவீட்டில் இருந்தே வேலையை தொடர்ந்து செய்யுமாறு அவன் நிறுவனம் தெரிவித்தது.

மகன் கவலை கொண்டான். ஆனால் அவள் வரையில்மகன் குடும்பத்தோடு மேலும் சில நாள் வீட்டில்இருக்கப் போவது மகிழ்ச்சியே. மேலும் இரண்டு வாரம் ஓடியது. அன்று காலையில் சற்று தலை வலிக்கவே போய்மருமகளை எழுப்பி "கொஞ்சம் காபி போட்டு தாம்மா" என்று கேட்டாள். சற்று லேட்டாகவே எழுந்து பழக்கப்பட்ட மருமகள், உடனே போய்காபி போட்டு கொடுத்தாலும் அவள் முகம் அதனைமகிழ்ச்சியாக இல்லை என்பதை லலிதா கவனிக்க தவறவில்லை. இப்படியாக சிறு சிறு உரசல்கள்அவளுக்கும் மருமகளுக்கும் வந்து கொண்டே இருந்தன. மகனுடனுமே கூட அவளுக்கு சிறுவயதில் இருந்த அன்னியோன்னியம் இன்றி சிறிய உரசல்கள் வந்தன.
அன்று அவர்கள் வரதர் கோவிலுக்கு போனார்கள். மூலவரை தரிசித்து திரும்பும் வேளையில் அவள் கணவர் சொன்னார் - "வாங்க. எல்லாரும் குளம் கீழ இருக்கற அத்தி வரதரை பார்த்துட்டு வரலாம் "

"குளம் கீழையா. எனக்கு இப்போவே கால் வலிக்கறது. இனி இத்தனை படி இறங்கி எதுக்கு. அவரை அடுத்த முறை பார்த்துக்கலாம். எங்க போக போறார்" எல்லோரும் சொல்ல குளக்கரை அத்தி வரதரை பார்க்காமலேயே அவர்கள் திரும்பினார்கள்

இரண்டுநாட்கள் போயிருக்கும். கைலாசநாதர் கோவில் பார்த்து விட்டு வர அவர்கள் கிளம்பினார்கள். மருமகள் கருப்பு ஆடை அணிந்து கிளம்ப, அவள் உரிமையோடு "என்னம்மா இது துக்க நாள்போல கருப்பு ஆடை.. " என்று கேட்க போக மருமகள் கத்திதீர்த்தாள். "என் இஷ்டம் போலநாள் உடை கூட உடுத்தமுடியாதா இங்கஎதுக்கு எடுத்தாலும் ஏதாவது சொல்லிகிட்டே இருக்கீங்க.. எதோ ஒரு வாரம்ரெண்டு வாரம் -னா சகிச்சிக்கிட்டு இருக்கலாம்.. இப்டி மாசக் கணக்குல..என்னால முடியல சாமி" - மருமகள் சொன்ன விஷயம் தன் மனதிலும் இருந்ததைலலிதா உணர்ந்த நொடி "அத்தை .. காபி கொண்டு வந்துருக்கேன்" என்ற குரல் கேட்டு அவள் கண் விழித்தாள்.

அங்கேபுன்னகை முகத்துடன் அவள் மருமகள் செல்விநின்றிருந்தாள்.

லலிதாவுக்குபேரதிர்ச்சி.. இத்தனை நேரம் கண்டதெல்லாம் கனவா?? உணர்ந்த நொடியில் அவள் முகத்தில்  நிம்மதிபடர்ந்தது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும்காண முடிந்ததால் தான் அத்தி வரதருக்குஇத்தனை சிறப்பு.எப்போது வேண்டுமானாலும் காணும் விதத்தில் குளத்தடியில் அத்தி வரதர் இருந்தால் அவரைக் காண இத்தனை கொண்டாட்டங்கள் இருக்காது. மதிப்பிற்குரிய பொருட்கள் அரிதாக இருப்பது தான் சிறப்பு. எளிமையாககிடைக்கும் எந்த பொருளின் மதிப்பையும் மக்கள் உணர்வதில்லை. தினம் பார்க்கும் விஷயங்கள் விரைவில் பழகி புளித்து  போகும்

இவர்களை பல ஆண்டுகளுக்கு ஒருமுறை காண்பதால் தான் மருமகள் கொண்டாடுகிறாள். இவளும் அவளை கொண்டாடுகிறாள். இதுவரை காஞ்சிபுரம் வந்தே இராத பலரும் இன்றுவந்து அத்தி வரதரை சேவிக்க அவர் என்றோ ஒரு நாள் வருவதே காரணம். இத்தனைபெரிய பேரருளாளனை எல்லோரும் காண விரும்பி வரவேண்டும் எனில் அவன் எப்போதும் காணமுடிந்தவனாக இருக்க கூடாது.

சிந்தனையில்அவள் லயிக்க, "அத்தை .. என்ன யோசனை.. நாளைக்குநாங்க அமெரிக்கா கிளம்பறோம். வாங்க இருக்கற நேரம் பேசிகிட்டு சந்தோசமா இருப்போம். " என்ற மருமகள் குரல்கேட்டு அவள் எழுந்த நொடிஅவள் மனதுக்குள் அத்தி வரதர் புன்னகை பூத்தார். அவள் அறியாமல் அவள் நாவு "நாராயணா" என முணுமுணுத்தது.


* * * * * 
உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன்  என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்


Comments

  1. Good one dude.. below lines true
    மதிப்பிற்குரிய பொருட்கள் அரிதாக இருப்பது தான் சிறப்பு. எளிமையாக கிடைக்கும் எந்த பொருளின் மதிப்பையும் மக்கள் உணர்வதில்லை. தினம் பார்க்கும் விஷயங்கள் விரைவில் பழகி புளித்து போகும்.

    ReplyDelete
  2. Good narration Sreenath... The way you got the story line to compare Athi varadhar and family was unexpected.. :) Nice one..

    ReplyDelete
  3. Good one strength ji😃👌

    ReplyDelete
  4. Good one..!! & Fact too..!!

    ReplyDelete
  5. Awesome story Sreenath.... Unexpected twist to make us realise the practicality... Good one... All the very best for your next short story.. Eagerly awaiting... -GAI3

    ReplyDelete
  6. Good one ji. . Nice comparison. 🎉 👍

    ReplyDelete

Post a Comment