"அந்த ஈரத் துணிகளை கீழ போட்டுட்டு முதல்ல வெளியே வா" அவன் உரக்க கோபத்துடன் கத்தியதைக் கேட்டு அவள் திடுக்கிட்டு கையிலிருந்த ஈரத் துணிகளைக் கீழே போட்டுவிட்டு விறுவிறுவென உடலில் சுற்றிய ஈரத் துணியோடு வெளியே வந்து அடுத்த அறைக்கு போய் கதவை சார்த்திக் கொண்டு உடை மாற்றத் துவங்கினாள். அவள் முகத்தை துண்டால் துடைத்த போது குளித்த ஈரத்துடன் அவள் கண்ணீரின் ஈரமும் கலந்தது.
******
பெற்றோருக்கு அவள் ஒரே பெண். படிப்பில் சுட்டி. அழகிற்கும் குறைவில்லை. அனால் கர்வம் துளி கூட இல்லாத இனிய சுபாவம் கொண்டவள். சிறு வயதில் இருந்து செல்லமாய் வளர்ந்தவள். அதிர்ந்து கூட யாரிடமும் பேசியதில்லை. சத்தமாக பேசினாலே "என்ன சண்டை" என்று கேட்க கூடிய குடும்பம். கல்லூரியிலும் அவள் அமைதியான குணத்தால் அவளுக்கு நல்ல நண்பர்களும் அமைந்தனர். அதில் ஒருவன் கமல்.
பெரிய அழகன் என்று சொல்ல முடியாது என்றாலும் அவன் முகம் களை நிரம்பி இருந்ததற்கு அவனது உதட்டில் எப்போதும் தவழும் புன்னகை ஒரு காரணம். செம ஜாலி பேர்விழி. பெரிதாக ஆண்களிடம் பேசி பழகியிராத அவளுக்கு அவனது குணம் பிடித்துப் போனது. எதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பது போல அவளது அமைதியான குணம் அவனையும் ஈர்த்ததோ என்னவோ, சீக்கிரத்தில் அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள், (அதற்கு கொஞ்சம் மேலும் என்று கூட சொல்லலாமோ?)
ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் ஒரு நாள் கூட கழிந்ததில்லை. பல சமயங்களில் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய பின்னும் செல்பேசியில் அவர்களின் உரையாடல்கள் தொடர்ந்தன. மற்றவர்களிடம் அமைதியாக இருந்த அவள் அவனிடம் மட்டும் எப்படி மணிக்கணக்கில் பேசுகிறாள் என்பது அவளுக்கும் விளங்கவில்லை. அது பற்றி அவள் கவலையும் கொள்ளவில்லை.
*****
கல்லூரிக் காலம் முடியும் சமயம் அவளுக்கு வீட்டில் வரன் பார்க்க துவங்கினர். அவனுக்கு படிப்பு முடித்து ஹைதராபாத்தில் வேலை கிடைத்தது. அவன் கிளம்பிய சில நாட்களில் வீட்டிற்கு பெண் பார்க்க வந்த விஜய்யின் குடும்பம் ஒரு விதத்தில் இவர்களுக்கு தூரத்து உறவு. பெரிய ஆடம்பரம் இன்றி பேசிய அவர்கள் குடும்பத்தை இவள் வீட்டில் அனைவருக்கும் பிடித்துப் போனது.
தன் பெற்றோருடன் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த விஜய்யை அவள் பார்த்தாள். தந்த வெள்ளை நிறம். நேர்த்தியான உடை. இன்று மட்டும் அல்ல, அவன் எப்போதும் நேர்த்தியைக் கடைப்பிடிப்பவன் என்பது பார்த்தாலே தெரிந்தது. தான் கொடுத்த பஜ்ஜி வகைகளை சிந்தாமல் சாப்பிட்டது முதற்கொண்டு, தனியாக பேச வேண்டுமா என்று கேட்ட போது "பெண்ணுக்கு விருப்பம் என்றால் பேசலாம்" என்று சொன்ன வரை அவன் செயல்கள் பலவும் அவளை ஈர்த்தது.
மதுரையை சேர்ந்த குடும்பம் - ஓரளவு வசதி ஆனது. வரதட்சணை பெரிதாக எதுவும் கேட்கவில்லை - பிடித்ததை செய்யுங்கள் என்று விட்டுவிட்டார்கள். விஜய் வேலை காரணமாக சென்னையில் அறை எடுத்து தங்கி இருந்தான். திருமணம் ஆன பின் இவர்கள் சென்னையில் தனிக்குடித்தனம் இருக்க வேண்டும் என்பதில் அவள் பெற்றோருக்கு உள்ளூர மகிழ்ச்சி. நினைத்த நேரத்தில் போய் பார்த்து வரக் கூடிய தூரமாக சென்னையிலேயே இருக்கப் போகிறாளே என்று.
அப்புறம் என்ன, வழக்கம் போல "டும்... டும் ... டும்..." ... ஆசை, மோகம் என 90 நாட்கள் கடந்து அவர்கள் லௌகீக வாழ்க்கையின் எல்லைக்குள் நுழைந்து சற்றேறக்குறைய ஒரு 2 மாதங்கள் தான் கடந்திருக்கும். *****
"என்ன உள்ள போய் அரை மணி நேரம் ஆகி இருக்கும்... ஈரத்தோட அப்படியே நில்லு.. இன்னும் நல்ல ஜுரம் வரும்" விஜய்யின் குரலைக் கேட்டு அவள் விறுவிறுவென ஈரத்துடன் கண்ணீரையும் துடைத்துக் கொண்டு கதவு திறந்தாள். "அழுதது தெரிந்தால் அதற்கும் திட்டு விழும். அவன் ஆபீஸ் போன பிறகு அழுது கொள்ளலாம்.", அவள் மனம் உள்ளுக்குள் புழுங்கியது.
விரைந்து வெளியில் வந்த அவள் தலையை முறைப்புடன் தடவிப் பார்த்தான் விஜய்- ஈரம் இல்லை என தெரிந்ததும், சிறிது நொய் கஞ்சியை கலந்து வந்து வைத்தான். சென்னையில் அறை எடுத்து தங்கியிருந்த அவனுக்கு சமையல் அத்துப்படி. ஒரு சிறிய தவறு செய்தாலும் உடனடியாக கண்டுபிடிக்கும் அவனை, சமையலில் திருப்தி செய்வது குதிரைக்கொம்பு. அவன் பேசாமல் சாப்பிட்டு விட்டுப் போய் விட்டால் அன்றைய நாள் அவளுக்கு நல்ல நாள்.
"சரி. கனவு கண்டது போதும். சீக்கிரம் குடி. “ - கழுத்தில் கையை வைத்து அவன் பார்த்த செயலில் அக்கறையை விட ஆதிக்கம் தான் அவளுக்கு அதிகம் தெரிந்தது. "நான் அலுவலகத்தில் சாப்பிட்டு கொள்கிறேன்" சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பாராமல் அவன் குளித்து விட்டு அவன் அலுவலகம் போனான். அதுவும் சும்மா போகவில்லை -"நீ உள்ள போய் தூங்கு. சமையல் உள்ளுல போனீன்னா கொன்னுருவேன்" கத்தி விட்டு தான் போனான். அவள் நினைவுகள் பின்னோக்கி ஓடின. கமலின் அருகாமையில் தான் கழித்த கல்லூரிக் காலங்கள் அவள் நினைவுக்கு வந்தன. செல்லம் கொஞ்சாத குறையாக அவளை கவனித்துக் கொள்வான் அவன். கல்லூரி டூரின் போது அவள் கேட்டாள் என்பதற்காக ஒரு மைல் தூரம் சென்று அவன் தேநீர் வாங்கி வந்த சம்பவம் நினைவுக்கு வந்து அவள் கண்களை கலங்கச் செய்தது. ஏனோ கல்லூரிக் காலத்திற்கு பின் அவனோடு பெரிய தொடர்பு இல்லை. அவள் பேசவில்லை - அவனும் பேச முயலவில்லை. ஒரு விதத்தில் யோசித்துப் பார்த்தால் தினம் பேசிய அவளுக்கும் கூட அவன் இல்லாமை பெரிதாக உரைக்கவில்லை என்பதை உணர்ந்தாள் . தான் பேசாதது தவறோ என்றும் சிந்தித்தாள். "நான் விளையாட்டாக கேட்ட தேநீருக்காக ஒரு மைல் நடந்த ஒருவன். இங்கும் ஒருவன்-உடல் சரியில்லாத நேரத்திலும் திட்டி விட்டு, எனக்கு உணவு வேண்டாம் என சொல்லி விட்டு போய் விட்டான். நான் சாப்பிட வேண்டுமே என்ற சிந்தனை கூட அவனுக்கு வந்ததா?? தெரியவில்லை. 'சமைக்காதே!! வேறு வேலைகளும் செய்ய வேண்டாம். ரெஸ்ட் எடு'- என்று கத்தி விட்டு வேறு போயிருக்கிறான். சமைக்கவும் செய்யாமல் நான் என்ன பட்டினி கிடப்பதா!! அது சரி. தானே சமைத்து சாப்பிட்டு விட்டால் அதற்கு அவனிடம் ஒரு பாடு திட்டு வாங்க வேண்டும். அதற்கு பட்டினி கிடப்பதே மேல்." -- சிந்தனைகள் அவள் மனதை அலைக்கழிக்க, அவள் சாளரம்*(ஜன்னல்) வழியே வானத்தைப் பார்த்தாள். ஏறத்தாழ நண்பகல் துவங்கியிருந்த அந்த சமயத்தில் பௌர்ணமி நிலவு வானத்தில் தெரிந்தது. "பகல் நேர வெளிச்சத்தில் நான் இல்லை என்று நினைத்தாயா. உற்றுப் பார்.. நான் எப்போதும் உன்னுடனே இருக்கிறேன்" என்று அது சொல்வது போல் இருந்தது. அவள் அதையே வெறித்து நோக்கினாள். அவளது சிந்தனைகளில் இருந்து அழைப்பு மணியின் ஒலி அவளைக் கலைத்தது. அவள் கதவைத் திறந்தால் அங்கு கட்டை பையுடன் தாய் நிற்பதை கண்டாள் . அவள் முகம் மலர்ந்தது. "வாம்மா"- உடல், மன களைப்புகளை மீறி அவள் குரல் ஒலித்தது. திருமணமான பெண்களுக்கு தாயைக் காண்பதைப் போல வேறு மகிழ்ச்சி எதிலும் உண்டா என்பது சர்சைக்குரியது தான்.
"என்ன திடீர்னு .. சர்ப்ரைஸா இருக்கு" அவள் கேட்க, "மாப்பிள்ளை போன் பண்ணிருந்தாரும்மா... உனக்கு உடம்பு சரியில்லைன்னு. அவளை உங்க வீட்டுக்கே கொண்டு விட்டுடலாம் நெனச்சேன். ஆனா அம்மா வர்றதா சொல்லிருக்காங்க. அவங்க வர நேரத்துல அவ வீட்டுல இல்லேன்னா நல்லா இருக்காது. நீங்க கொஞ்சம் போய் பாத்துக்கோங்க. சமையல் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டேன். சாப்பாடு எடுத்துட்டு போய்டுங்கனு சொன்னார். நான் எடுத்துட்டு வந்துருக்கேன். சாயந்திரம் நான் வர வரைக்கும் இருங்கனு சொல்லி எனக்கு ஓலோ-வுல கார் புக் பண்ணி குடுத்தார். சரி. எல்லாம் கிடக்கட்டும். நீ போய் படுத்து ரெஸ்ட் எடு." தாயின் சொல்லுடன் அவளுக்கு இருந்த களைப்பும் சேர்ந்து தூண்ட அவள் போய் படுத்தாள். மேலும் சிந்தனைகள் அவளை ஆக்கிரமித்தன.
அவள் தன் கணவன் பற்றி சிந்தித்தாள். சமையல் உள்ளிட்டவற்றில் அவன் குறை சொல்வானே தவிர, அவன் அவளுக்கு செய்வதில் குறை வைத்ததில்லை. அவள் உறவுகள் வந்திருந்த நாள் இரவு அவளை தூங்க விட்டு அவன் சமையலறை முழுவதையும் தானே சுத்தம் செய்தான். அவள் வீட்டுக்கு விலக்கான நாள்களில் அவள் துணியைத் துவைப்பது முதல் சமையல் வரை அவனே தான் கவனித்துக் கொண்டான். நடுநடுவே அவன் திட்டியது மனதில் நின்ற அளவு அவன் அக்கறையும் அன்பும் அவள் மனதில் ஏனோ நிற்கவில்லை என்பதை உணர்ந்தாள். திட்டு - அது உண்மையில் திட்டு தானா? சொல்லப் போனால் அவன் வேலை செய்ய சொல்லி திட்டியதில்லை. "ஏன் கஷ்டப்படுகிறாய். வேலை செய்தது போதும். போய் ஓய்வெடு." என்று தான் பெரும்பாலும் திட்டியுள்ளான். சமையலைக் கூட ஒரு நாளும் வெளியில் குறை சொன்னதில்லை. இன்னும் சிறப்பாக எப்படி செய்வது என்று அவனுக்கு சமையல் நன்கு தெரிந்த விதத்தில் அவன் சொன்ன விஷயங்கள் தான் அவளுக்கு குறை சொல்வதாக தெரிந்தன ... சூரியனை மறைத்த மேகங்கள் கலைவது போல அவள் அவன் மீது கொண்ட கோபமும் ஆற்றாமையும் விரைந்து விலகின. அவன் மீதான அவள் மதிப்பு விரைந்து உயர்ந்தது.
கல்லூரி நட்பு இரவு நேர நிலவு போல - காண்பது, உணர்வது எளிது. துணையின் அன்போ நண்பகல் நிலவு. நாம் உணராமலே கூட போகலாம்.
"நான் உன்னை நோகடித்திருந்தால் மன்னித்து விடடா " மனதில் கணவனிடம் இறைஞ்சிய நேரம், கதவு திறந்து மாமியாருடன் வந்து நின்ற கணவனை வியப்பாகப் பார்த்தாள். “இந்நேரம் இவன் எங்கே?? அதுவும் மாமியாரோடு"... அவனோ, அவளைப் பார்த்து மர்மப் புன்னகையுடன் உள்ளே போய் எதையோ எடுத்து வந்தான்.
*****
"தான் தான் அவன் அக்கறையை தவறாக எடுத்துக் கொண்டோமோ??" அவள் மனம் குழம்பியது. கவலைகளும் பொறுப்பும் இல்லாத கல்லூரிக் காலத்து நண்பன் செயல்களோடு குடும்ப பாரத்தைச் சுமக்கும் குடும்பத்தலைவன் செயல்களை ஓப்பிட்டது தவறோ? அவ்வளவு உருகிய கமல் வேலை கிடைத்தபின் தன்னிடம் பேசிக் கூட முயலவில்லையே. அப்போது கல்லூரிக் கால செயல்கள் எல்லாம் அறியாச்செயல்கள் தானா. அக்கறை என்பது அதில் பெரிதாக இல்லையோ?
*****
அவள் தன் கணவன் பற்றி சிந்தித்தாள். சமையல் உள்ளிட்டவற்றில் அவன் குறை சொல்வானே தவிர, அவன் அவளுக்கு செய்வதில் குறை வைத்ததில்லை. அவள் உறவுகள் வந்திருந்த நாள் இரவு அவளை தூங்க விட்டு அவன் சமையலறை முழுவதையும் தானே சுத்தம் செய்தான். அவள் வீட்டுக்கு விலக்கான நாள்களில் அவள் துணியைத் துவைப்பது முதல் சமையல் வரை அவனே தான் கவனித்துக் கொண்டான். நடுநடுவே அவன் திட்டியது மனதில் நின்ற அளவு அவன் அக்கறையும் அன்பும் அவள் மனதில் ஏனோ நிற்கவில்லை என்பதை உணர்ந்தாள். திட்டு - அது உண்மையில் திட்டு தானா? சொல்லப் போனால் அவன் வேலை செய்ய சொல்லி திட்டியதில்லை. "ஏன் கஷ்டப்படுகிறாய். வேலை செய்தது போதும். போய் ஓய்வெடு." என்று தான் பெரும்பாலும் திட்டியுள்ளான். சமையலைக் கூட ஒரு நாளும் வெளியில் குறை சொன்னதில்லை. இன்னும் சிறப்பாக எப்படி செய்வது என்று அவனுக்கு சமையல் நன்கு தெரிந்த விதத்தில் அவன் சொன்ன விஷயங்கள் தான் அவளுக்கு குறை சொல்வதாக தெரிந்தன ... சூரியனை மறைத்த மேகங்கள் கலைவது போல அவள் அவன் மீது கொண்ட கோபமும் ஆற்றாமையும் விரைந்து விலகின. அவன் மீதான அவள் மதிப்பு விரைந்து உயர்ந்தது.
கல்லூரி நட்பு இரவு நேர நிலவு போல - காண்பது, உணர்வது எளிது. துணையின் அன்போ நண்பகல் நிலவு. நாம் உணராமலே கூட போகலாம்.
"நான் உன்னை நோகடித்திருந்தால் மன்னித்து விடடா " மனதில் கணவனிடம் இறைஞ்சிய நேரம், கதவு திறந்து மாமியாருடன் வந்து நின்ற கணவனை வியப்பாகப் பார்த்தாள். “இந்நேரம் இவன் எங்கே?? அதுவும் மாமியாரோடு"... அவனோ, அவளைப் பார்த்து மர்மப் புன்னகையுடன் உள்ளே போய் எதையோ எடுத்து வந்தான்.
"அம்மா.. அத்தை.. ரெண்டு பெரும் சேர்ந்து என் பொண்டாட்டிக்குக் கேசரி ஊட்டி விடுங்க. உங்க பேரன் அவ வயித்துல இருக்கான். நேத்து தான் டாக்டர் சொன்னாங்க. நீங்க ரெண்டு பேரும் இருக்கும் போது சொல்லலாம்னு தான் இன்னும் அவகிட்ட சொல்லல. காலைலயே கேசரி செஞ்சுட்டேன். அவ உள்ள போனா பாத்துடுவாளேன்னு சமையல் ரூம் உள்ளகூட போகாதான்னு சொல்லிட்டு போனேன். அவ போய் பாத்து சர்ப்ரைஸ் மிஸ் ஆயிடுமோன்னு பயந்துட்டு இருந்தேன். ஆனா நான் சொன்னது தான் சாக்குன்னு அவளும் சமையல் கட்டு பக்கமே போகாம இருந்துருக்கா... " அவளைப் பார்த்து கண்ணடித்தபடி அவன் சொல்ல அவள் ஓடிப்போய் அவனைக் கட்டி அணைத்தாள். அவள் கண்களில் துளிர்த்த நீர் வழியாக சாளர இடைவெளியில் நண்பகல் நிலவு அவளைப் பார்த்துச் சிரித்தது.
உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், அடுத்து வரும் கதைகள் பற்றி அறிய : Vetti Vaayan / வெட்டி வாயன் என்ற முகநூல் பக்கத்தை பின்தொடரவும்
Super 👍. Simply awesome.
ReplyDeleteSuper..😀
ReplyDeleteAwesome...
ReplyDeleteVery nice one Sreenath
ReplyDelete